ஆற்றில் பிணமாக மிதந்த பூக்கடை ஊழியர்

வில்லியனூர் அருகே ஆற்றில் பூக்கடை ஊழியர் பிணமாக மிதந்தார்.

Update: 2022-05-09 17:45 GMT
வில்லியனூர்  அருகே ஆற்றில் பூக்கடை ஊழியர் பிணமாக மிதந்தார்.
ஆற்றில் ஆண் பிணம்
வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் ஆற்றில் ஆண்பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஆற்றில் இறந்து    கிடந்தவர்   திருக் கோவிலூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 47) என்பதும், பத்துக்கண்ணு சந்திப்பில் ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மதுபோதையில் அவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்