மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த போலீசார்

வில்லியனூர் அருகே பறிமுதல் செய்ப்பட்ட மாட்டு வண்டிகளை போலீசாரே போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்தனர்.;

Update: 2022-05-08 18:14 GMT
வில்லியனூர் அருகே உள்ள கோடம்பாக்கம் பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் திருட்டு தனமாக மணல் அள்ளப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் 3 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி சென்றது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை போலீசாரே போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்தனர்.

மேலும் செய்திகள்