பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

2-ம் உலகப்போர் நினைவு தினத்தையொட்டி பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Update: 2022-05-08 17:23 GMT
2-ம் உலகப்போரின் 77-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் வல்லவன், பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே மற்றும் பிரெஞ்சு முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடிமக்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், பிரெஞ்சு தூதரக அதிகாரி இம்மானுவேல் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் கலந்துகொண்டு போர் வீரர்கள் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்