தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் இன்று 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2022-05-08 14:28 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் அசானி புயல் நிலைகொண்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்றாலும், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

எனினும், தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்றும் வெப்பநிலை அதிகரித்து கானப்பட்டது. இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் இன்று 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்