“தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமை” - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்

தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலின் மூலம் தெரிய வந்துள்ளது.

Update: 2022-05-08 09:21 GMT
சென்னை,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீண்டாமை குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்விக்கு, காவல் துறையினர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பதிலளித்துள்ளது. 

அந்த பதிலில், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், 341 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அதிகபட்சமாக மதுரையில் 43 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக விழுப்புரத்தில் 25 கிராமங்களிலும், நெல்லையில் 24 கிராமங்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன் இந்த பட்டியலில் சென்னை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 

அதே சமயம் தீண்டாமையை ஒழிக்க 2021 ஆம் ஆண்டு 597 விழிப்புணர்வு செயல்பாடுகளும், 2022 மார்ச் வரை 212 விழிப்புணர்வு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்சியில் 50 விழிப்புணர்வு நடவடிக்கைகளும், குறைந்தபட்சமாக மதுரையில் 3 விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்