7 அணிகள், 23 பிரிவுகள் உள்பட பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல்: அண்ணாமலை வெளியிட்டார்

7 அணிகள், 23 பிரிவுகள் உள்பட பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.

Update: 2022-05-06 23:54 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க.வில் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், கரு.நாகராஜன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பி.கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், ஆர்.சி.பால் கனகராஜ் ஆகிய 11 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கராத்தே தியாகராஜன்

எம்.முருகானந்தம், ராம.ஸ்ரீனிவாசன், பொன்.வி.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி ஆகிய 5 பேர் மாநில பொதுச்செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், டி.மலர்க்கொடி, எஸ்.மீனாட்சி, வினோஜ் பி.செல்வம், எஸ்.சரவணகுமார், எம்.மீனாதேவ், ஏ.அஸ்வத்தாமன், ஆர்.அனந்தபிரியா, பிரமிளா சம்பத், எஸ்.சதீஷ்குமார், எஸ்.ஜி.சூர்யா ஆகிய 13 பேர் மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி தலைவி

எஸ்.ஆர்.சேகர் மாநில பொருளாளராகவும், எம்.சிவசுப்பிரமணியன் மாநில இணை பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் அணி தலைவியாக ஆர்.உமாரதி, இளைஞர் அணி தலைவராக எம்.ரமேஷ் சிவா, விவசாய அணி தலைவராக ஜி.கே.நாகராஜ், எஸ்.சி. அணி தலைவராக தடா பெரியசாமி, எஸ்.டி. அணி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சிவபிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவியாக டெய்சி சரண், ஓ.பி.சி. அணி தலைவராக எஸ்.சாய்சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.பி.க்கள் சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன் மற்றும் எஸ்.ஆதவன் ஆகியோர் மாநில செய்தித்தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரிவுகளின் தலைவர்கள்

மீனவர் பிரிவு தலைவராக எம்.சி.முனுசாமி, நெசவாளர் பிரிவு தலைவராக கே.எஸ்.பாலமுருகன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு தலைவராக பெப்சி ஜி.சிவக்குமார், கல்வியாளர் பிரிவு தலைவராக தங்க கணேசன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு தலைவராக கர்னல் ராமன், அரசு தொடர்பு பிரிவு தலைவராக எம்.பாஸ்கரன், சமூக ஊடகப்பிரிவு தலைவராக சி.டி.ஆர்.நிர்மல்குமார், பிரசாரப் பிரிவு தலைவராக குமரி கிருஷ்ணன், வக்கீல் பிரிவு தலைவராக வி.வணங்காமுடி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவராக ஜி.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான பிரிவு தலைவராக ஜே.லோகநாதன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக அமர்பிரசாத் ரெட்டி, தரவுத்தள மேலாண்மை பிரிவு தலைவராக பி.மகேஷ்குமார், ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவராக எம்.நாச்சியப்பன்,

ஊடகப்பிரிவு தலைவராக பி.ரெங்கநாயக்கலு, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்நலன் பிரிவு தலைவராக ஆதித்தியா, கூட்டுறவுப் பிரிவு தலைவராக கே.மாணிக்கம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவராக சோழன் பழனிச்சாமி, வர்த்தகப் பிரிவு தலைவராக ஏ.என்.ராஜகண்ணன், மருத்துவப் பிரிவு தலைவராக பிரேம்குமார், தொழில்துறை பிரிவு தலைவராக பி.கோவர்த்தனன், பிறமொழிப் பிரிவு தலைவராக கே.பி.ஜெயக்குமார், விருந்தோம்பல் பிரிவு தலைவர்களாக ராத்மா சங்கர், பி.கந்தவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.என்.ராஜா

தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக சிவகாமி பரமசிவம், எம்.என்.ராஜா, பி.ரமேஷ், கே.சர்வோத்தமன், முன்னாள் எம்.பி. சி.நரசிம்மன், மோகன்ராஜுலு, ஜி.கே.எஸ்.செல்வக்குமார், முன்னாள் எம்.பி.அம்பேத்ராஜன், கட்டளை ஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.விஜயராகவன் உள்பட 39 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கராத்தே தியாகராஜன், எம்.என்.ராஜா, கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்பட 60 பேர் மாவட்ட பார்வையாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட தலைவராக எம்.மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினராக சென்னை சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்