தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-06 16:02 GMT
சென்னை, 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தாழ்வு மண்டலமாக, புயலாக வலுப்பெறும் நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல்,  அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்