சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை - ஐகோர்ட் உத்தரவு

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-06 11:29 GMT
சென்னை,

அதிமுக ஆட்சியின் போது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையை மோசடி செய்ததாக அவர் மீது புகாா் அளிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கில் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் 9ஆம் தேதி தேதியும் செந்தில்பாலாஜி 13ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனிடையே அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இவ்வழக்கை இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்