வேலூர் சிறையில் 6-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்...!

வேலூர் சிறையில் முருகன் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

Update: 2022-05-06 04:52 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 6-வது நாளாக முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல் சோர்வடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால் சிறை டாக்டர்கள் முருகனை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்