கோடைக்கால அமர்வு: கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-06 02:56 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெயில் காரணமாக சென்னை ஐகோர்ட்டின் வழக்கறிஞர்கள் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிய விலக்களித்தாலும் கருப்பு கோட் மற்றும் கழுத்துப்பட்டை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை தொடர்ந்து தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்