மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலி
மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலி உடலை காட்டுப்பன்றிகள் கடித்து குதறின.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 2-வது கொண்டைஊசி வளைவு அருகே நேற்று காலை 6 மணி அளவில் ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக பழனி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே சிறுத்தை உடல் கிடந்த பகுதிக்கு 3 காட்டுப்பன்றிகள் வந்தன. பின்னர் அவை சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து தின்றன. உடனே வாகன ஓட்டிகள் ‘ஹாரன்' எழுப்பி காட்டுப்பன்றிகளை விரட்ட முயன்றனர்.
அப்போது சிறுத்தையின் உடலை காட்டுப்பன்றிகள் கடித்து குதறுவதை அங்கிருந்த வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ‘வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.