தி.மு.க. ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை: வணிகர் தின மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சென்னையில் நடந்த வணிகர் தின மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில், 39-வது வணிகர் தினத்தையொட்டி சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் அருகே நேற்று மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன்ஜெயபால் தலைமை தாங்கினார். தலைவர் ஏ.மாரித்தங்கம் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.
வணிகர்கள் சமூகம் மன்னிக்காது
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
வணிகர்களின் நலனுக்கு எதிரான எந்த ஒரு சட்டமானாலும் அதை அ.தி.மு.க. தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வும் நாடாளுமன்றதில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள லட்சோப லட்ச சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
வணிகர்களின் காவலனாக தன்னை காட்டிக்கொள்ளும் தி.மு.க., மத்தியில் அரசாண்ட காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் ஒரு போதும் மறக்காது, மன்னிக்காது.
பாதுகாப்பு இல்லை
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, ஜி.எஸ்.டி. கூட்டங்களின்போது தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட சீரிய முயற்சிகளின் விளைவாக 39 சரக்குகள் மற்றும் 11 சேவைகளின் மீது வரிவிலக்கு, வரிகுறைப்பு அளிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் முழு அடைப்பின்போது வாழ்வாதாரத்தை இழந்து நின்ற சிறு வணிகர்களின் நலன் காக்க மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய எனது தலைமையிலான அரசு சென்னை மற்றும் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான வணிகர்களுக்கு உரிமம் வழங்கியது.
தி.மு.க. ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டை அ.தி.மு.க. ஆட்சி செய்தபோது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதால் வியாபாரிகள் எந்த அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியாக தொழில் செய்யும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது புரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் உதைப்பதும், கடையை மூடிவிட்டு சென்ற பிறகு கடை முன்பு இருக்கிற கடப்பா கல்லைக் கூட களவாடி செல்லும் நிலையும் இருக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம்
வியாபாரிகள் கடையை திறந்தால் மாமூல் கேட்பது, தராவிட்டால் வியாபாரி மீது வன்முறையை ஏவிவிடுவது, தாக்குவது, கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லும் வணிகர்களின் கைப்பையை வழிப்பறி செய்வது, மூடியுள்ள கடைகளில் துளையிட்டு கொள்ளை அடிப்பது என தமிழ்நாட்டில் வர்த்தகர்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்கி வாழும் நிலை தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நிலவி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் ஒற்றுமையாக இருந்தால் சிறு வணிகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டோர்
மாநாட்டில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், சத்திரியர் மக்கள் கட்சி தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பொருளாதார மீட்பு மாநாடு
இதேபோல தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழக வணிகர்களின் பொருளாதாரம் மீட்பு' என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ்குமார், பொருளாளர் எஸ்.ஏ.ஷேக் முகமது அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.