தமிழகத்தில் வரும் 8-ந் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் வரும் 8-ந் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 8-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுவரை 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இந்த முகாமில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.