பள்ளிக்கல்வித்துறை - கூகுள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

பள்ளிக்கல்வித்துறை - கூகுள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

Update: 2022-05-05 06:02 GMT
சென்னை,

கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

தொழில்நுட்பம் மூலம் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்துகொள்ள 'Google Road Along' என்ற செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். முத்தமிழ் மொழிபெயர்ப்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடம் திட்டத்தில் நூல்களையும் வெளியிட்டார். 

மேலும் செய்திகள்