எந்திர பாகங்கள் திருடிய 2 பேர் கைது

ரோடியர் மில்லில் எந்திர பாகங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-04 16:44 GMT
புதுச்சேரி- கடலூர் சாலை முதலியார்பேட்டையில் ரோடியர் மில் உள்ளது. இந்த மில் பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. இந்த மில்லில் உள்ள எந்திரங்களின் பாகங்களை மர்ம நபர்கள் திருடிச்செல்வதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
இந்தநிலையில் ரோடியர் மில்லில் 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்து எந்திர பாகங்களை திருடி சென்றனர். இதுகுறித்து அங்கு பணியில் இருந்த காவலாளி நடராஜன் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் எதிந்திர பாகங்களை திருடியது உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பெயிண்டர் முத்துகுமரன் (வயது 26), வாணரபேட்டையை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துகுமரன், பிரவின்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எந்திர பாகங்கள் மீட்கப்பட்டன.

மேலும் செய்திகள்