பாடப்புத்தகங்களில் ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்

‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடல் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-05-04 15:15 GMT
சென்னை,

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பேசவும், எழுதவும், அழைக்கவும் தொடங்கினர். திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். 

தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை பாடப்புத்தகங்களிலும் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.”

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்