குளியல் அறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மர்ம நபர்கள்...!

கடலூர் அருகே குளியல் அறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.

Update: 2022-05-04 10:53 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னி செல்வி (வயது 50). கணவர் செல்வம் இறந்துவிட்டதால், தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார்.

கன்னி செல்வி இன்று காலை 5 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறைக்கு குளிக்கச் சென்று உள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் கன்னி செல்வி திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு தலையை கெட்டியாக பிடித்து கொண்டான். மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து உள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

இதுகுறித்து கன்னி செல்வி ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குளியலறையில் குளிக்கச் சென்ற பெண்ணிடம் பதுங்கியிருந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து ஸ்ரீமுஷ்ணம்  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்