மேட்டூர் அணை நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.80 கன அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2022-05-04 08:56 GMT
சேலம்,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 3,111 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றைய நிலவரப்படி 5,310 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளுக்காக 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 105.58 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.80 அடியானது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்