எழும்பூர் கோர்ட்டு முத்திரை திருட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது

எழும்பூர் கோர்ட்டு முத்திரை திருட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது.

Update: 2022-05-03 18:47 GMT
சென்னை,

சென்னை எழும்பூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் முத்திரை மாயமானது. இதுதொடர்பாக கோர்ட்டின் மொழி பெயர்ப்பாளர் மதுரவல்லி, எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோர்ட்டு அறைக்குள் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, முத்திரையை திருடியது அதே அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சைதாப்பேட்டை தாதண்டர் நகரைச் சேர்ந்த விவேகானந்தன் (வயது 48) என்பது தெரிய வந்தது. இவர், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பதுக்கியதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

அவர், இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுகோள் விடுப்பதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு வந்துள்ளார். அவரது வேண்டுகோள் நிறைவேறாததால் விரக்தியில் கோர்ட்டு முத்திரையை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து விவேகானந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரை அதே கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்