கார் டிரைவருக்கு கத்திக்குத்து

ரெட்டியார்பாளையத்தில் தனியார் பள்ளி தாளாளரின் கார் டிரைவரை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2022-05-03 16:25 GMT
ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 29). இவர் வி.மணவெளி பகுதியில் தனியார் பள்ளி தாளாளர் கம்பிலிஸ் லூயிஸ் என்பவருக்கு கார் டிரைவராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கம்பிலிஸ் லூயிஸ் வீட்டில் கரையான்பேட் பகுதியை சேர்ந்த பாகுபலி என்ற ரவீந்திரன் வேலை பார்த்து வந்தார். அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு சிவபாலன் தான் காரணம் என கருதிய ரவீந்திரன், அவரிடம் தகராறு செய்து மறைத்து வைத்து   இருந்த   கத்தியால் சிவபாலனை   குத்திவிட்டு   தப்பியோடி  விட்டார்.  இதில் காயமடைந்த சிவபாலன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்