தமிழகம், புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும்
தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர சபதம் ஏற்போம் என புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்தார்.;
தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர சபதம் ஏற்போம் என புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்தார்.
மே தின பொதுக்கூட்டம்
புதுச்சேரி மேற்கு மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையம் சிக்னல் அருகே நடந்தது. தொழிற்சங்க பேரவை செயலாளர் மலை.செல்வராஜி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏழுமலை, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் மூர்த்தி, அவைத்தலைவர் ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி
கூட்டத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கலந்துகொண்டு பேசியதாவது:-
மே தின விழாவை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது. தமிழகத்தின் நலத்திட்டங்களை பார்த்து புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி வராதா? என மக்கள் ஏக்கம் அடைந்து இருந்தனர்.
புதுவையில் ஏராளமான கட்சிகள் உள்ளது. பதவிக்காக பலர் பல்வேறு கட்சிகளில் மாறி வருகின்றனர். ஆனால் நான் இறுதிவரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். தமிழகம், புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக இங்கு சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. முடிவில் கதிர்காமம் தொகுதி செயலாளர் வேலவன் நன்றி கூறினார்.