11 மாவட்டங்களில் கொரோனா இல்லை: தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளன.

Update: 2022-05-01 23:04 GMT
சென்னை,

நேற்று புதிதாக 18 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆண்கள் 25 பேர், பெண்கள் 22 பேர் உள்பட 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 25 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பதிவாகியுள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளன. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 979 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

514 பேர் சிகிச்சை

தமிழகத்தில் தொடர்ந்து 45-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 514 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 11 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

46 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 15 ஆயிரத்து 440 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்