மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூரில் பழைய அனல் மின் நிலையம், புதிய அனல் மின் நிலையம் என 2 அனல் மின்நிலையங்கள் உள்ளன.
இதில் பழைய அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல புதிய அனல் மின் நிலையம் 600 மெகாவாட் கொண்ட ஒரே யூனிட்டுடன் செயல்படுகிறது.
இந்தநிலையில் பழைய அனல்மின் நிலையத்தில் நேற்று முதல் 1-வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடந்து வருகிறது. மற்ற 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு 210 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வருகிறது.
நிலக்கரி தட்டுப்பாடு
தற்போது நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் பல இடங்களில் உள்ள அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை அனல் மின்நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற 2 யூனிட்டுகளில் மின் தேவை குறைந்துள்ளதால் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.