இலங்கையில் நடந்த மே தின விழாவில் அண்ணாமலை பங்கேற்பு

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இலங்கை நுவோலியாவில் நடந்த மே தின விழாவில் அண்ணாமலை பங்கேற்றார்.

Update: 2022-05-01 20:03 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இலங்கை நுவோலியாவில் நடந்த மே தின விழாவில் அண்ணாமலை பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசும்போது, ‘இலங்கை தமிழர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயலபடுததி உள்ளாா். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசால் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 4 ஆயிரம் வீடுகளை தவிர கூடுதலாக 10 ஆயிரம் வீடுகளை கட்டி தருவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியோடு கட்டப்பட்ட ஹட்டன் நோர்வூட் விளையாட்டு வளாகம் இங்கு முழு பயன்பாட்டில் உள்ளது' என்றார். விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தமிழர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும் நெருக்கமான உறவைப்பற்றி எடுத்து கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்