மே தின விழா கொண்டாட்டம்
தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
தி.மு.க.
தி.மு.க. அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, புதுவை அரசு போக்குவரத்து கழக பணிமனை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியேற்றப்பட்டு தொழிலாளர்களுக்கு இனிப்புகள், சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் சண்.குமாரவேல், குணாதிலீபன், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், வடிவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி அமைப்பாளர் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க.
அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்த வாணரப்பேட்டை தாமரைநகர் ஆட்டோ ஸ்டாண்டில் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ராசு, மாநில துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி இணை செயலாளர் ஏழுமலை தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ஆறுமுகம், நகர தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க.
பா.ஜ.க. சார்பில் புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மே தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் வருண் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில தலைவர் சாமிநாதன் கலந்துகொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிசெல்வம், வணிக பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் மதன், பொருளாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி.
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மே தின கொடியேற்று விழா நடந்தது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் 150 பஸ் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், துணைத்தலைவர் முருகன், செயலாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சி.ஐ.டி.யு.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி மே தினவிழாவினை கொண்டாடினர். அப்போது சிங்காரவேலரின் நினைவை போற்றும் வகையிலும், இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், புதுவை அரசு தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழாவில் சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் பெருமாள், கொளஞ்சியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஐ.என்.டி.யு.சி.
ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலச்சங்கம், ஒதியம்பட்டு இந்தியன் ஆயில் பாட்டலிங் பிளாண்ட் ஆகியவற்றில் மே தின விழா நடைபெற்றது. விழாவில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாலாஜி கலந்துகொண்டு சங்க பெயர் பலகைகளை திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்ச்செல்வன், பன்னீர், சபரி, நாகலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். காரைக்காலில் ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் விநாயக மிஷன், ஜான்சன் டைல்ஸ், உஜாலா, பஞ்சாலைகளில் ஐ.என்.டி.யு.சி. கொடியேற்றி மே தின விழா கொண்டாடப்பட்டது.
சாலைபோக்குவரத்து கழகம்
புரட்சியாளர் அம்பேத்கர் புதுவை சாலைப்போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் மாநில செயலாளர் அமுதவன் முன்னிலையில் அரிமா தமிழன் சங்க கொடியை கொடியேற்றினார். அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில செயலாளர மணீத் கோவிந்தராஜ், மாநில தலைவர் சக்திசிவம், சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் மாதா கோவில், காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சீருடை, இனிப்புகளை வழங்கினார்.