மலை பாதையில் தலைகுப்புற கவிழ்ந்த கார் - போலீசார் விசாரணை...!
கொடைக்கானல் அருகே மலை பாதையில் கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்துக்கு உள்ளானது.
பெரும்பாறை,
தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43).கார் டிரைவர். இவர், தனது நண்பர்களான ஜெய்பட்டேல், சந்திரகான் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் அவர்கள் அகிருந்து இன்று தென்காசி செல்வதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுப்பிரமணி ஓட்டினார். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் வாழக்கிரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக கார் ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.