ஸ்ரீபெரும்புதூர் அருகே 13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் அருகே படப்பையில் உள்ள நாவலூரில் பகுதியில் தனியார் அறக்கட்டளை நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை நிர்வாகத்தினர் 20 வருடங்களாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், அந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனர். பின்னர் காவல்துறை உதவியுடன் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.