புதுச்சேரி கவர்னர் தமிழிசை மே தின வாழ்த்து

புதுச்சேரி கவர்னர் தமிழிசை மே தின வாழ்த்து தெரிவித்தாா்.

Update: 2022-04-30 17:36 GMT
மே தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் பெருமையையும், தியாகத்தையும் உலகிற்கு பறைசாற்றும் இந்த நன்னாளில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். பொருளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவர்கள். அவர்களுடைய வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுச்சேரி அரசு துணை நிற்கும். உழைக்கும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ  என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்