மயிலாடுதுறை: அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவிகள் உள்பட 17 பேர் படுகாயம்

மயிலாடுதுறையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-04-29 18:49 GMT
மயிலாடுதுறை,

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.

சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் சாலையின் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரம் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்