சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்...!

தூத்துக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-28 08:30 GMT
எட்டயபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் முனியசாமி (47) இவர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

முனியசாமியும் மற்றும் கிளீனராக உடன்வந்த ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூர் பகுதியை சேர்ந்த  கோட்டைமுத்து (19) ஆகிய இருவரும் அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் இருந்து கழுகுமலை செல்வதற்காக சிமெண்டு மூடைகளை ஏற்றிச் கொண்டு சென்றனர்.

அப்போது அதிகாலை 5 மணி அளவில் விளாத்திகுளம் சித்தவநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் மற்றும் கிளீனரை மீட்ட விளாத்திகுளம் போலீசார் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்