புளியஞ்சோலையில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் சுற்றுலா பயணிகள்...!

திருச்சி அருகே உள்ள புளியஞ்சோலையில் அடிப்படை வசதியின்றி சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.;

Update: 2022-04-28 04:15 GMT
உப்பிலியபுரம், 

திருச்சி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று புளியஞ்சோலை. மலையும் மலை சார்ந்த வனப்பகுதியும், தெள்ளிய நீரோட்டமும், பச்சை பசேல் என வயல்வெளிகளும் சூழ அமைந்ததுள்ள புளியஞ்சோலையில் கோடை கால பருவத்திலும் நீரோட்டம் இருப்பதால், தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆத்தூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நீர்மின் திட்டத்திற்காக அய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்காக சுற்றுலா துறையினரால் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள் ஆகிய  தகர்க்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி களையிழந்து காணப்படுகிறது. 

மேலும் பெண்கள் உடைமாற்றும் அறையும் தகர்க்கப்பட்டுள்ளதால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.  இதேபோன்று குறைவான பாதுகாப்பு அதிகாரிகளே பாதுகாப்பு பணியில் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலை பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மேலும் செய்திகள்