சட்டசபையில் கடும் அமளி: சபாநாயகர் முன்பு தர்ணா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டு, சபாநாயகர் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை,
சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், தஞ்சையில் கோவில் தேர் இழுக்கும்போது மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த நிகழ்வு குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்கீழ் பேசினர்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.):- கோவில் தேர் இழுக்கும் சம்பவத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். தேர்த்திருவிழாவின்போது முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். சாலை செப்பனிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை சம்பவம் போல் இனி நடைபெறாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த துயர சம்பவத்தில் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்கிறோம்.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மகாமகத்தில் உயிரிழப்பு
அமைச்சர் சேகர்பாபு:- என்னுடைய பதிலைக்கூட கேட்காமல் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். இந்த துயரமான சம்பவத்தில் அரசியல் செய்யக்கூடாது. பொதுவாக எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக சொல்லக்கூடாது. அங்கு நடைபெற்ற திருவிழாவில் தேர் இழுக்கப்படவில்லை. சப்பரம்தான் இழுக்கப்பட்டது. அரசுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விழா நடத்தப்பட்டது. மற்ற உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு விளக்கமாக கூறுகிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்):- இன்றைக்கு மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது வருந்தத்தக்கது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கும்பகோணத்தில் மகாமகம் நடந்தபோது ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தார்கள். அதுகுறித்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் விளக்கம் அளித்தார். மகாமகம் நடந்தபோது அவரும், அவரது தோழியும் நீராடினார்கள். கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தாக இதே சட்டசபையில் அவர் பேசி பதிவாகியிருக்கிறது.
இன்றைக்கு நடந்துள்ள விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் நேரடியாக ஆறுதல் கூறுவற்காக தஞ்சாவூர் சென்று இருக்கிறார். அதற்காக நன்றி கூறுகிறோம்.
கூச்சல், குழப்பம்
செல்வப்பெருந்தகை பேசிமுடித்த நிலையில், மற்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருந்தபோது வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கோபமாக சபாநாயகரை நோக்கி, செல்வப்பெருந்தகை பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து விளக்கம் அளித்து பேச தனக்கு வாய்ப்பு தரும்படி சபாநாயகரிடம் கேட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர், ‘உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் மற்ற உறுப்பினர்கள் பேசி முடித்தபிறகு வாய்ப்பு தருகிறேன்' என்றார். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வினர் எழுந்து தங்களை பேச அனுமதிக்கும்படி குரல் எழுப்பினர்.
பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் சைகை மூலம் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர்களும், தி.மு.க. உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கைகளை நீட்டி பேசிக்கொண்டனர். யாருக்கும் மைக் கொடுக்கப்படாததால் அவர்கள் பேசியது அவைக்குறிப்பில் பதிவாகவில்லை.
அரசியல் செய்யலாமா?
அமைச்சர் சேகர்பாபு:- கோவில் திருவிழா விபத்தில் பலியானவர்களின் உடல் அடக்கம்கூட இன்னும் நடக்கவில்லை. அதற்குள் நீங்கள் அரசியல் செய்யலாமா? இது போன்று நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தன்னை பேச அனுமதிக்கும்படி மீண்டும் வலியுறுத்தினார். அ.தி.மு.க. உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்வரிசைக்கு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. ஒட்டுமொத்த அ.தி.மு.க. உறுப்பினர்களும் அங்கே குவிந்தனர்.
சபாநாயகர்:- ஒரு தீர்மானத்தில் ஒருமுறைதான் பேச முடியும். உங்களுக்கு ஏற்கனவே நான் வாய்ப்பு தந்துவிட்டேன். நீங்கள் பேசி வெளிநடப்பும் செய்துவிட்டீர்கள். வெளிநடப்பு செய்தபிறகு மீண்டும் வந்து பேச வாய்ப்பு கேட்டால் எப்படி? இது அவை மரபு அல்ல. எனவே உங்களுக்கு பேச வாய்ப்பு தர முடியாது.
கடும் அமளி
இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கோஷம் போட்டனர். கடும் அமளியிலும் ஈடுபட்டனர். பதிலுக்கு தி.மு.க. தரப்பிலும் குரல் எழுப்பப்பட்டதால் யார் பேசியதும் புரியாத அளவுக்கு கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று தனது இருக்கையைவிட்டு எழுந்து சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைப் பார்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உதயகுமார், முனுசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பியபடி அமைச்சர்கள் இருந்த பகுதிக்கு சென்றனர். அதனால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை கட்டுமீறி போவதை உணர்ந்த அவை முன்னவர் துரைமுருகன், ‘அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள். எனவே அவர்களை அவைக்காவலர்களை கொண்டு வெளியேற்ற வேண்டும்' என்றார். இருப்பினும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்டனர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் இருக்கைக்கு செல்ல மறுத்தனர்.
வெளியேற்றம்
சபாநாயகர் அப்பாவு:- நான் பலமுறை கூறியும் நீங்கள் அவைக்கு குந்தகம் விளைவிக்கிறீர்கள். உங்களை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
உடனே அவைக்காவலர்கள் சட்டசபைக்குள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினார்கள். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உதயகுமார், முனுசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் அமைச்சர்களை நோக்கி கையை நீட்டி ஏதோ பேசினர். பதிலுக்கு அமைச்சர்களும், தி.மு.க. உறுப்பினர்களும் ஆவேசமாக பேசினர்.
சபாநாயகர்:- எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கனவே வாய்ப்பு கொடுத்துவிட்டேன். என் இருக்கை முன்பும் வந்து போராடுகிறார்கள். நடந்தது துயரமான சம்பவம். இதற்கு முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்து, நிதியுதவியும் அறிவித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்கூற தஞ்சாவூர் சென்று இருக்கிறார்.
மகாமகம்
மகாமகத்தின்போது ஏற்பட்ட விபத்து குறித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் பேசி பதிவான ஒன்றைத்தான் செல்வப்பெருந்தகை இங்கு மேற்கோள் காட்டியிருக்கிறார். அதை நீக்குவதற்கு என்ன இருக்கிறது? நீக்க வேண்டும் என்றால் மறைந்த முதல்-அமைச்சர் பேசியதையும் நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்களா? இந்த அவை உங்களை போன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. நீங்கள் வகுத்த விதிமுறைகளின் அடிப்படையிலே இயங்குகிறது. என்னை பொறுத்தவரையில் அவையை கண்ணியத்துடன்தான் நடத்துகிறேன். நடந்த நிகழ்வை மறப்போம், மன்னிப்போம்.
கோவிந்தசாமி, முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைச்சர்களை ஒருமையில் பேசியது வருந்தக்கத்தது. அதனால் இன்று (நேற்று) ஒருநாள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளேன்.
அவை முன்னவர் துரைமுருகன்:- தஞ்சையில் விபத்தில் சிக்கி உயிர்கள் துடித்துகொண்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி நடந்துகொள்ளலாமா? எதிர்பாராத ஒரு விபத்து தஞ்சையில் ஏற்பட்டது போல் சட்டசபையிலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதில்கூட அரசியல் செய்து எதிர்க்கட்சி நண்பர்கள் இப்படி நடந்துகொண்டது வருத்தத்துக்கு உரியது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் விரும்பத்தக்கவை அல்ல.
இந்த விஷயத்தை சபாநாயகர் கையாண்ட விதத்தை நான் பாராட்டுகிறேன். பொதுவாகவே சட்டமன்ற விதிகள் 55, 56-ல் சிறப்பு தீர்மானம் வருகின்ற நேரத்தில் எல்லாம் இதுபோன்ற பிரச்சினை வருகிறது. எனவே சிறப்பு தீர்மானம் இல்லாத விவாதத்தை எடுக்கக்கூடாது.
நடவடிக்கை
அமைச்சர் சேகர்பாபு:- இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. எனினும் வருங்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, திருவிழாக்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உடன் கலந்து ஆலோசித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போதிய ஏற்பாடுகளும், பாதுகாப்பும் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:- மனிதநேயமிக்க நம்முடைய முதல்-அமைச்சர் ஆறுதல் சொல்வதற்காக தஞ்சாவூருக்கு நேரில் சென்று உள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஒரு நபர் குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு துயரமான சம்பவம் நடைபெற்ற இந்த சூழ்நிலையில், தேவையில்லாத கருத்தை அங்கே பதிவு செய்திருக்கிறார்.
இது தி.மு.க.வின் தூண்டுதல்பேரில் இவர் பேசியிருப்பதாக சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு முறையில் கவன ஈர்ப்பாகட்டும், மற்ற வகையில் அவர் பேசும்போதும் சரி, உறுப்பினர் செல்வபெருந்தகை அ.தி.மு.க.வை குறை சொல்லிதான் பேசிக்கொண்டிருக்கிறார்.
இப்போது இருக்கின்ற செல்வப்பெருந்தகை 2006-ம் ஆண்டு ஜெயலலிதாவின் செல்வாக்கால்தான் சட்டமன்ற உறுப்பினரானார். அதனை மறந்துவிட்டு பேசுகிறார். அவருக்கு விலாசம் அளித்ததே அ.தி.மு.க.தான். அப்போது எல்லாம் இதுபற்றி அவருக்கு தெரியாதா?.
இவ்வாறு அவர் கூறினார்.