வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பெயரில் போலியாக வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நடத்தி ரூ.2.5 கோடி மோசடி முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
மத்திய அரசு நிறுவனமான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தென்மண்டல அதிகாரி ஆர்.சுந்தரேசன் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல் மதுரை, கோவை, காஞ்சீபுரம் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக போலியான நேர்முக தேர்வை நடத்தி உள்ளன.
மேலும் இதுபோல திருப்பத்தூரிலும் போலியான நேர்முக தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, கூடுதல் துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
8 பேர் கைது
இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக திருப்பத்தூர் சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். போலியான நேர்முக தேர்வு நடத்த இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
8 பேர் அதிரடியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திபாகரன் (வயது 39), திருப்பத்தூரைச் சேர்ந்த சத்தியநாராயணன் (26), திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (33), ஓசூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (68) ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான திபாகரன் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி மோசடிக்கான வியூகத்தை வகுத்து கொடுத்துள்ளார். போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும், தன்னால் மத்திய-மாநில அரசுகளில் எளிதில் வேலை வாங்கித்தர முடியும் என்றும் கதை விட்டுள்ளார்.