பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ்; தபால் துறை பெயரில் மோசடி
தபால் துறை பெயரில் பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி மோசடி செய்வதாக வேலூர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
தபால் துறை பெயரில் பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி மோசடி செய்வதாக வேலூர் அதிகாரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் வாட்ஸ் அப்பில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது . அதில் தபால் துறை வாயிலாக மானியம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கபடுவதாகவும் மேலும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்காக குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது .
மேலும் அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை தொடும் போதும் பிறந்த தேதி , செல்போன் எண் , வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படுகிறது . இதன் மூலம் பொதுமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது .
எனவே இதுபோன்ற போலி வலைதளங்களில் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் .தபால் துறைக்கும் இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை . எனவே பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் . இதுபோன்ற போலி தகவல்களை தடை செய்ய தபால் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மானியம் , பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் தபால் துறை பெயரில் வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாறாதீர்கள். மானியம், பரிசு வழங்குவதாக கூறி தபால் துறை பெயரில் செல்போனுக்கு வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாற வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.