தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வராது டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வராது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பி்ன்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நோய் கட்டுப்பாடு பணிகள் நடந்து வருகிறது. ஐ.ஐ.டி.யில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது 111 ஆக ஆதிகரித்துள்ளது.
அந்தவகையில் 32 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி.யில் உள்ள 7 ஆயிரத்து 490 பேரில் 3 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் மிகக்குறைவாகவே பரவல் உள்ளது. 1 கோடியே 48 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக தகுதியான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கவலைப்பட வேண்டிய கட்டத்தில் சூழ்நிலை இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரம் பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போது வல்லுனர்கள் கருத்தாக உள்ளது.
ஊரடங்கு வராது
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவதற்குமான சூழ்நிலை தற்போது இல்லை. எனவே ஊரடங்கு வராது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
ஆஸ்பத்திரிகளில் இதுவரை மின்வெட்டு பிரச்சினை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ‘ஜெனரேட்டர்கள்’ தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.