‘மன்னர் வகையறா’ பட விவகாரம்: நடிகர் விமல் புகாரில் சினிமா வினியோகஸ்தர் கைது
‘மன்னர் வகையறா’ பட விவகாரத்தில் நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில், சினிமா வினியோகஸ்தர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
பசங்க, களவாணி, மஞ்சப்பை, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விமல். இவர் ரூ.5 கோடி பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் கடந்த 19-ந்தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ‘மன்னர் வகையறா’ படத்திற்காக பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல், கடந்த 20-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாரை விசாரிக்கும் விசாரணை அதிகாரி முன்பு, ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தன்னை மோசடி செய்ததாக தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான சிங்காரவேலன் குறித்தும் விமல் புகார் அளித்திருந்தார்.
வினியோகஸ்தர் மீது புகார்
மேலும் இந்த பட விவகாரம் தொடர்பாக ரூ.1.74 கோடி மோசடி செய்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பட அதிபர் மகள் ஹேமா என்பவர் புகார் அளித்தார்.
இந்த நிலையில், பைனான்சியர் கோபி என்பவர் கடனை கேட்டு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், உடனடியாக சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் விமல் கடந்தாண்டு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வினியோகஸ்தர் சிங்காரவேலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
இந்நிலையில் புகார் தொடர்பாக போரூர் பகுதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலனை விருகம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விமல் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த படத்துக்கு நடிகர் விமலின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக சிங்காரவேலன் இருந்து வந்தார். இந்த நிலையில் ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து சிங்காரவேலன் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.5 கோடி பணத்தை விமல் பெற்றதாகவும், அப்போது விமலின் நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அந்த வங்கி கணக்கை சிங்காரவேலன் நிர்வகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மோசடி
மேலும் மன்னர் வகையறா திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் விற்பனை தொகையை பைனான்சியர் கோபியிடம் கொடுத்து கடனை அடைப்பதாகவும், மீதமுள்ள பணத்தில் நிறுவனத்தில் பணியாயாற்றிய ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவதாக கூறி நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் படம் ரிலீஸ் ஆனவுடன் நஷ்டம் அடைந்ததாக கூறி சிங்காரவேலன் பைனான்சியர் கோபிக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி தராமல் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
நேற்று முன்தினம் நடிகர் விமல் சென்னை கூடுதல் கமிஷனர் முன்பு ஆஜராகி வழக்கு சம்பந்தமாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக நடிகர் விமல், சினிமா தயாரிப்பாளர் கோபி, சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலன், பட அதிபர் மகள் ஹேமா என மாறி, மாறி புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.