மின்வெட்டு என்ற மாயத்தோற்றம் உருவாகிறது" - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-26 16:32 GMT

சென்னை,

திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மானியக்கோரிக்கை விவாத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, நிர்வாகத்தில் உள்ள தவறுகளால் மின் வெட்டு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய செந்தில் பாலாஜி, மின் வெட்டு குறித்த மாய தோற்றத்தை உருவாக்குவதாகவும், இரண்டு நாட்களின் மின் வெட்டு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த வழிகாட்டு நெறிமுறை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்