தக்காளி விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகள் கவலை
சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளியில் விலை மிகவும் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியில் விலை ஐந்து ரூபாயாக இருந்த நிலையில், தற்போது திடீரென ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.