விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
அரசு தொடக்கப்பள்ளியில் போட்டி பரிசளிப்பு விழா ஆகியவை நடந்தது.;
புதுவை சித்தன்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம், விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, வாசித்தல் திருவிழா ஆகியவை நடந்தன. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி துணை ஆய்வாளர் (வட்டம்1) மல்லிகா கோபால் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை உமாதேவி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் செய்திருந்தனர்.