முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் மரக்காணம் வாலிபர் சிக்கினார்.

Update: 2022-04-24 20:47 GMT
மரக்காணம்,

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் பேசிய நபர், ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக’ கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

அந்த எண் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மரக்காணம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புவனேஸ்வரன் (வயது 22) என்பவர் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

புவனேஸ்வரன் ஏற்கனவே நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஆவார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்