விபத்தில் சிக்கிய ரயிலின் 10 பெட்டிகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்...!
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது.
சென்னை,
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்தன.
பணிமனையில் இருந்து சென்ற ரெயில் என்பதால் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ரெயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரெயில் நிலையத்திற்குள் மிகவும் குறைவான வேகத்தில் ரெயில் நுழைந்த போது, ரெயிலில் ஏறுவதற்காக வழக்கம் போல பயணிகள் நடைமேடையில் நின்று கொண்டிக்கின்றனர்.
திடீரென ரெயில் நடைமேடையில் மோதி நின்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் விபத்தில் சிக்கிய மின்சார ரயிலின் 10 பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இரண்டு பெட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு பெட்டியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.