அரசின் விலையில்லா சைக்கிள்கள் பதுக்கல் - கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

அரசு வழங்கிய இலவச சைக்கிள்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-23 20:36 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் விலையில்லா சைக்கிள்களை பதுக்கி வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. 

இது தொடர்பாக அங்கு அதிரடி சோதனை மேற்கொண்ட கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், முதற்கட்டமாக அங்கு 26 விலையில்லா சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் குறித்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் உரிமையாளரை கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்