"இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ கணிசமாக அதிகரிப்பு" - சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-04-23 16:43 GMT
கோப்புப் படம்
சென்னை,

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவுகிறது என்பதைக் கணக்கிடும் ஆர் வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆர் வேல்யூ 1-க்கு குறைவாக இருந்தால் தொற்று பரவல் வேகம் குறைவாக உள்ளது. 1-க்கு அதிகமாக இருந்தால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கிறது என்று மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் ஒட்டு மொத்த ஆர் வேல்யூ 1.3 ஆக இருக்கிறது என்றும் தலைநகர் டெல்லியில் ஆர் வேல்யூ 2.1 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஐஐடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 4-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது என்று கூறிய ஆய்வில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர், இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 பேருக்கு தொற்றை கடத்துகிறார் என்று கூறியிருக்கிறார். டெல்லியைத் தவிர மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் தொற்று குறைவாகவே இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்