கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோவையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-23 08:00 GMT
கோவை:

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை அடங்கிய மண்டல இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு இணை போக்குவரத்து ஆணையராக உமா சக்தி என்பவர் உள்ளார். 

இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக அளித்த புகாரின் பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவையில் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்