காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, வந்தவம்தாங்கள், வீராகோவிலில் வசித்து வந்தவர் தமிழரசன் (வயது 24). ராணுவ வீரர். பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சீபுரம் மாவட்டம் சித்தேரிமேடு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ராணுவ வீரரின் தந்தை பார்த்திபன் பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்காவை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்தனர்.