தமிழ்நாட்டு மக்களுக்காக நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம் -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களுக்காக நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Update: 2022-04-22 14:50 GMT
சென்னை ,

தமிழ்நாட்டு மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம் என முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது ; 

தமிழ்நாட்டு மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம்.நானும், அமைச்சர்களும் ஓயாமல் பணியாற்றுவதால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது .

ஓயாத பணியால் நாட்டிலேயே முதன்மையான முதல் அமைச்சராக  இருக்க முடிகிறது. என்ன பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன் 

மேலும் செய்திகள்