விசாரணை கைதி மரணம்; உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் இடைநீக்கம்- டிஜிபி நடவடிக்கை
சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் கைதி விக்னேஷ் இறந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்க்காவல் படையை சேர்ந்த தீபக் என்பவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை டிஜிபி மேற்கொண்டுள்ளார்.
வாகன சோதனையின்போது கத்தி, கஞ்சா வைத்திருந்ததாக விக்னேஷ் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.