சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை,
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 38). முத்துக்குமார்(34) பொன்ராஜ்(28) ஆகிய 3 பேர் நேற்றுமுன்தினம் ஒரு காரில் மதுரை நோக்கி வந்தனர். இவர்கள் 3 பேரும் பால் வியாபாரிகள். நள்ளிரவு 12 மணி அளவில் திருமங்கலத்தை கடந்து கப்பலூர் சுங்கச்சாவடிக்கு அவர்களது கார் வந்தது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள், காரை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டல்
அங்கு சென்சாரில் காரின் பதிவு எண்ணை சரிபார்ப்பதற்காக பின்னால் தள்ளி காரை நிறுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஜெயக்குமார் திடீரென, தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி சுங்கச்சாவடி ஊழியர்களை சுட்டு விடுவதாக மிரட்டினார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கைது
இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரும் சுங்கச்சாவடியில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சுங்கச்சாவடி ஊழியர்களை காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, கப்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களது காரில் இருந்த ஏர்கன் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையின் போது, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் அலைக்கழிப்பு செய்ததால் துப்பாக்கியை காட்டி மிரட்டினோம் என ஜெயக்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.