முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு

கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-04-21 17:16 GMT
கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ள நோட்டுகள்
புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல் என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை கும்பலிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புதுவையில் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை எண்ணூர் பிரதீப்குமார், ரகு (வயது 30), ராயபுரம் நாகூர் மீரான் (30), தமீன் அன்சாரி (28) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதுவை வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி.ரன்வீர் சிங் கிறிஷ்ணியா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தொடங்கியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்