கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு பின் வி.கே.சசிகலா பேட்டி
விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னை,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.
எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என சொல்ல முடியாது. நாளை விசாரணை நிறைவடைந்த பின் விரிவாக பேசுகிறேன் என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.